அணைக்கரை கொள்ளிடம் கீழணை பாலத்தில் முன்னெச்சரிக்கையாக பஸ் போக்குவரத்து நிறுத்தம்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அடுத்துள்ள அணைக்கரை கொள்ளிடம் கீழணையில் இருந்து உபரி தண்ணீர் வினாடிக்கு 2½ லட்சம் கன அடி வீதம் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலுக்கு கல்லணையில் இருந்து திறக்கப்பட்டது.
மீன்சுருட்டி,
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அடுத்துள்ள அணைக்கரை கொள்ளிடம் கீழணையில் இருந்து உபரி தண்ணீர் வினாடிக்கு 2½ லட்சம் கன அடி வீதம் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலுக்கு கல்லணையில் இருந்து திறக்கப்பட்டது. இதையடுத்து அணைக்கரை கொள்ளிடம் கீழணையின் பாதுகாப்பையொட்டி நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் அணைக்கரை பாலம் வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டது. மேலும் இந்த வழியாக கார்கள் மற்றும் வேன்கள் மட்டுமே சென்று வருகின்றன.
இந்த வழியாக சென்னை, பாண்டிச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், மற்றும் கும்பகோணம், தஞ்சை, திருவாரூர், ராஜமன்னார்குடி, பட்டுக்கோட்டை செல்லும் அனைத்து பஸ்களும் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு வழியாக ஜெயங்கொண்டம், தா.பழூர் மற்றும் மதனத்தூர் கொள்ளிடம் வழியாக இயக்கப்படுகின்றன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலத்தின் வழியாக செல்லும் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. மீண்டும் அணைக் கரை பாலம் வழியாக பஸ்கள் இயக்க மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.