கோர்ட்டு அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணிக்கான தேர்வுகள்: பலத்த போலீஸ் பாதுகாப்பு
வேலூரில் கோர்ட்டு அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வுகள் நேற்று நடந்தது. 15 காலி இடங்களுக்கு 5 ஆயிரத்து 652 பேர் தேர்வு எழுதினர்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் அமீனா, கணினி ஆபரேட்டர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் போன்ற 45 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
45 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 15 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்திருந்தனர். அமீனா பணிக்கான எழுத்து தேர்வு கடந்த 12-ந் தேதி நடந்தது. 15 காலி இடத்துக்கு 5 ஆயிரத்து 843 பேர் தேர்வு எழுதினார்கள்.
இந்த நிலையில் கோர்ட்டு அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணிக்கான எழுத்து தேர்வு வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டில் நேற்று நடந்தது. இந்த தேர்வுகளுக்கு 6 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு காலை 9 மணிக்கு தொடங்கியது. ஒரு மணி நேரம் தேர்வு என 5 கட்டங்களாக தேர்வுகள் நடந்தது.
தேர்வு அறைகளை வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆனந்தி பார்வையிட்டார். குடும்ப நல நீதிபதி லதா, தொழிலாளர் நல நீதிபதி செல்வசுந்தரி, தலைமை குற்றவியல் நீதிபதி பாரி, மகளிர் விரைவு நீதிபதி செல்வம் உள்பட பலர் தேர்வு அறைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். தேர்வு அறைக்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
கோர்ட்டு அலுவலக உதவியாளர், இரவு காவலர் ஆகிய பணிகளுக்கான 15 காலி இடத்துக்கு 5 ஆயிரத்து 652 பேர் தேர்வு எழுதினார்கள்.
இத்தேர்வை எழுத விழுப்புரம், திருவண்ணாமலை, மதுரை, திருநெல்வேலி, திருப்பூர், கன்னியாகுமரி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேர்வர்கள் வந்திருந்தனர். மேலும் தேர்வு எழுத பெண்கள் சிலர் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர். குழந்தைகளை தங்களின் உறவினர்களிடம் அவர்கள் கொடுத்துவிட்டு தேர்வு எழுத சென்றனர். அவர்கள் வரும்வரை உறவினர்கள் கோர்ட்டு வளாகத்தில் குழந்தைகளை வைத்திருந்தனர்.
மின்பராமரிப்பு பணி காரணமாக சத்துவாச்சாரி பகுதியில் நேற்று காலை 9 மணிக்கு மின் நிறுத்தம் செய்யப்பட்டது. அதனால் கோர்ட்டு அறைகளில் வைத்து தேர்வுகள் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து முதற்கட்டமாக கோர்ட்டு ஹால் மற்றும் திறந்தவெளி பகுதியில் வைத்து தேர்வுகள் நடத்தப்பட்டது.
தேர்வுகள் நடப்பது குறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுமார் 10.30 மணியளவில் கோர்ட்டு பகுதிக்கு மின் வினியோகம் செய்யப்பட்டது.
தேர்வையொட்டி கோர்ட்டின் பிரதான நுழைவுவாயில் மற்றும் பின்வாசல் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோர்ட்டுக்கு வந்தவர்கள் அனைவரும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.