ஆம்பூரில் கடைகள் அடைப்பு: அரசு பஸ் கண்ணாடி உடைப்பு; பா.ஜனதா தலைவர் உள்பட 3 பேர் கைது
வாஜ்பாய் மறைவை முன்னிட்டு ஆம்பூரில் கடைகள் அடைக்கப்பட்டன. அரசு பஸ் கண்ணாடியை உடைத்ததாக பாரதீய ஜனதா கட்சி நகர தலைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆம்பூர்,
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து ஆம்பூரில் பாரதீய ஜனதா கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் பஜார் பகுதியில் திரண்டு ஊர்வலமாக சென்று கடைகளை அடைக்க வலியுறுத்தியும், நாளை (நேற்று) முழுஅடைப்பு நடைபெறும் என அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று காலையில் ஆம்பூர் பஜார், பைபாஸ் சாலை, எஸ்.கே.ரோடு, பஸ்நிலையம், ஒ.வி.ரோடு, ஷராப் பஜார் உள்பட நகரின் பெரும்பாலான பகுதிகளில் நகைக்கடை, ஓட்டல், ஜவுளிக்கடை உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் மக்கள் நடமாட்டமின்றி பஜார் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
இதனிடையே ஆம்பூரில் இருந்து குடியாத்தம் சென்ற அரசு டவுன் பஸ் மீது ஆம்பூர் பைபாஸ் சாலையில் கல் வீசப்பட்டது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது.
இதுகுறித்து பஸ் டிரைவர் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜ.க. நகர தலைவர் அண்ணாதுரை (வயது 44), சுரேந்தர் (33), கமல் (43) ஆகிய 3 பேரை கைது செய்து ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இந்த தகவல் அறிந்ததும் பா.ஜ.க. மாவட்ட தலைவர் கொ.வெங்கடேசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் கைது செய்யப்பட்ட பா.ஜ.க.வினரை விடுவிக்கும் வரை இங்கிருந்து கலைந்து செல்லமாட்டோம் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் டவுன் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் போலீசார் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க முடியாது என கூறினர். அதைத்தொடர்ந்து போலீசாரை கண்டித்து அங்கிருந்து கோஷமிட்டவாறு கலைந்து சென்றனர்.
முழு அடைப்பு நடந்ததால் நகர தலைவர் அண்ணாதுரை உள்பட பா.ஜ.க.வினர் மீது காழ்புணர்ச்சி கொண்டு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக கட்சியினர் புகார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் ஆம்பூரில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.