பல்வேறு இடங்களில் வீடுகளில் புகுந்து திருடியவர் கைது

புதுவையில் பல்வேறு இடங்களில் வீடுகளில் புகுந்து திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-08-18 00:00 GMT
புதுச்சேரி,

புதுவை முதலியார்பேட்டை பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் நடந்து வந்தன. இதுதொடர்பாக தொடர்ந்து போலீசுக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து கைது செய்ய போலீசாருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா உத்தரவிட்டார். இதையொட்டி போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகீம் தலைமையில் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். இந்தநிலையில் முத்திரையர்பாளையம் காந்திதிருநல்லூர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது 25) என்பவர் மேட்டுப்பாளையத்தில் கொலைமுயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது தேனி மாவட்டம் ஓடைப்பட்டியை சேர்ந்த சேர்ந்த கணேஷ் என்பவருடன் சேர்ந்து புதுவையில் பல்வேறு வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். அவரை திருட்டு வழக்கிலும் கைது செய்த போலீசார் 15 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். அவரது கூட்டாளியான கணேசன் தற்போது மதுரை சிறையில் இருப்பது தெரியவந்துள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்