சேலத்தில் மாயமான புதுமாப்பிள்ளை காதலியுடன் ஓட்டம்?
சேலத்தில் திருமணம் நின்றது மாயமான புதுமாப்பிள்ளை காதலியுடன் ஓட்டம்? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்,
சேலம் கிச்சிப்பாளையம் ஓந்தாப்பிள்ளைக்காட்டை சேர்ந்தவர் வினோத் (வயது 27). இவர், மல்லூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், பரமத்திவேலூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு அவர்களது திருமணம் சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக நடைபெற்று வந்தநிலையில், திடீரென நேற்று முன்தினம் காலையில் புதுமாப்பிள்ளை வினோத் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன்பிறகு திரும்பிவரவில்லை. இதனால் நேற்று நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. வினோத் மாயமானது தொடர்பாக அவரது உறவினர்கள் தரப்பில் கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. வினோத்தின் தாய் இறந்துவிட்டதால் அவரது பாட்டி செல்வி தான் அவரை கவனித்து வந்தார். இதனால் அவரிடமும், வினோத்தின் தந்தையிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் வினோத் எங்கு சென்றார்? என்ற விவரம் ஏதும் தெரியவில்லை.
அதேசமயம், வினோத்தும், வேறு ஒரு பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் திருமணம் பிடிக்காமல் அவரது காதலியுடன் அவர் சென்றிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம், மாயமான புதுமாப்பிள்ளை அவரது காதலியுடன் ஓட்டம் பிடித்தாரா? அல்லது வேறு ஏதும் பிரச்சினை காரணமாக வெளியூர் சென்றாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.