5 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் அட்டகாசம்

உசிலம்பட்டி அருகே 5 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.

Update: 2018-08-17 22:35 GMT
உசிலம்பட்டி,


உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிழார் பஞ்சாயத்திற்கு உட்பட்டது எம்.புதூர். இந்த கிராமத்தைச் சேர்ந்த பலர் வெளி மாநிலங்களில் முறுக்குப்போடும் தொழில் செய்து வருகின்றனர். இதன்காரணமாக தங்கள் வீட்டை பூட்டி விட்டு தொழில் செய்யும் வெளிமாநிலத்திற்கு சென்று விடுவார்கள்.

இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நேற்று முன்தினம் இரவு எம். புதூரில் அடுத்தடுத்து உள்ள காராமணி, பேச்சியம்மாள், பழனி, செல்வம், ராஜாங்கம் ஆகியோரின் வீடுகளில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவையும் உடைத்துள்ளனர். இதில் காராமணி வீட்டில் இருந்த 7 பவுன் தங்க நகை, பேச்சியம்மாள் வீட்டில் 3 பவுன் நகையையும் திருடி உள்ளனர்.

மேலும் திருடர்கள் எதிர்பார்த்த அளவிற்கு பொருட்களோ, நகைகளோ கிடைக்காததால் ஆத்திரம் கொண்ட கொள்ளையர்கள் வீட்டில் உள்ள கட்டில் பீரோ மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களை உடைத்து அட்டகாசம் செய்து தப்பி ஓடிவிட்டனர். கிராம மக்கள் காலையில் பார்த்தபோது தொடச்சியாக 5 வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த கிராம மக்கள் உசிலம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில் போலீசார் கொள்ளை நடந்த வீடுகளுக்குச் சென்று கொள்ளை நடந்தது குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரழைக்கப்பட்டு தடயங்கள் சேரிக்கப்பட்டன. இந்தக் கிராமத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதேபோல் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்