ரூ.1 லட்சத்துக்காக கடத்தப்பட்ட சிறுவன் 6 மணி நேரத்தில் மீட்பு சாக்கிநாக்காவில் சம்பவம்

சாக்கிநாக்காவில் ரூ.1 லட்சத்துக்காக கடத்தப்பட்ட சிறுவனை போலீசார் 6 மணி நேரத்தில் மீட்டனர்.

Update: 2018-08-17 22:30 GMT
மும்பை, 

சாக்கிநாக்காவில் ரூ.1 லட்சத்துக்காக கடத்தப்பட்ட சிறுவனை போலீ சார் 6 மணி நேரத்தில் மீட்டனர்.

சிறுவன் கடத்தல்

மும்பை சாக்கிநாக்கா, காஜூபாடா பகுதியை சேர்ந்தவர் சேக். இவரது 5 வயது மகன் நேற்று முன்தினம் காலை வீட்டருகே விளை யாடி கொண்டு இருந்தான். அப்போது சிறுவன் திடீரென மாயமானான். சிறுவனை குடும்பத்தினர் அந்த பகுதியில் தேடி அலைந்தனர்.

இந்தநிலையில் சேக்கிற்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். அவர் உங்கள் மகனை நான் கடத்தி வைத்துள்ளேன் என்றும், ரூ.1 லட்சம் தரவில்லை என்றால் அவனை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டினார்.

6 மணி நேரத்தில் மீட்பு

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சேக் உடனடியாக போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சேக்கிற்கு போன் செய்து மிரட்டியவரின் செல்போன் எண்ணை வைத்து அவரை தேடினர். இதில் கடத்தல்காரர் சேக்கின் வீடு அமைந்துள்ள பகுதி யிலேயே பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் ஒரு வீட்டில் இருந்த கடத்தல்காரர் அக்ரம் கானை கைது செய்தனர். மேலும் அங்கு இருந்து சிறுவனை பத்திரமாக மீட்டனர்.

கடத்தப்பட்ட 6 மணி நேரத்தில் சிறுவனை மீட்ட போலீசாரை உயர்அதிகாரி கள் பாராட்டினர். ரூ.1 லட்சத்திற்காக சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தால் சாக்கிநாக்காவில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்