சூளகிரி அருகே ரூ.1.80 கோடி மதிப்பில் புதிய பாலம் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
சூளகிரி அருகே ரூ.1.80 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாலத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஆழியாளம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.1.80 கோடி மதிப்பில் புதிதாக உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை தலைமை செயலகத்திலிருந்து, காணொலி காட்சி மூலம் (வீடியோ கான்பரன்ஸ்) திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட பாலத்தின் அருகே நடந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, மாவட்ட கலெக்டர் கதிரவன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
பின்னர் அமைச்சர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சூளகிரி ஒன்றியம் காமன்தொட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆழியாளம் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஊரக வளர்ச்சி கனிம வள ஆதாரம் நிதியின் கீழ், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பில் புதிய உயர்மட்ட பாலம் கட்ட உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து இந்த பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று(நேற்று) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளார். போடூர், ஆழியாளம், ராமாபுரம், பீர்ஜேபள்ளி, நாயக்கனபள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள், விவசாயிகள், தொழில் நிறுவனங்களுக்கு செல்லும் பணியாளர்கள் தென்பெண்ணை ஆற்றை கடந்து செல்ல சிரமப்பட்டு வந்தனர். மேலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அனைத்து தரப்பு மக்களும் மிகவும் அவதியடைந்து வந்தனர். தற்போது அனைத்து தரப்பினரும் சிரமம் இன்றி செல்ல இந்த பாலம் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக முகமை திட்ட இயக்குனர் நரசிம்மன், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆப்தா பேகம், சுந்தரபாஸ்கர், சூளகிரி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ஏ.வி.எம்.மது என்ற ஹேம்நாத், காமன்தொட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் சந்திரசேகர், முன்னாள் ஓசூர் நகராட்சி கவுன்சிலர் பி.ஆர்.வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.