சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 134 நிறுவனங்கள் மீது நடவடிக்கை அதிகாரி தகவல்

சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 134 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ரவி ஜெயராம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-16 20:35 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ரவி ஜெயராம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ரவிஜெயராம் தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் பொன்னிவளவன் (செங்கல்பட்டு), பிரகாஷ் (மதுராந்தகம்), நாகராஜன் (தாம்பரம்), செந்தில்குமார் (பரங்கிமலை) ஆகியோர் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்பட 174 நிறுவனங்களில் சுதந்திரத்தினத்தையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா அல்லது உரிய முன்னறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

134 நிறுவனங்கள்

இதில் அன்றைய தினம் விடுமுறை அளிக்காத, தொழிலாளர் ஆணையருக்கு முன்னறிவிப்பு அளிக்காத கடைகள் மற்றும் நிறுவனங்கள் 46, உணவு நிறுவனங்கள் 74, மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் 14 உள்பட 134 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்