அண்ணாநகரில் வாலிபர் கொலை வழக்கில் மேலும் 6 பேர் கைது

அண்ணாநகரில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-08-16 22:00 GMT
பூந்தமல்லி,

சென்னை அரும்பாக்கம் அசோக் நகரை சேர்ந்தவர் ஆதித்யன் (வயது 21). வீடுகளுக்கு குடிநீர் கேன் வினியோகம் செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை அண்ணா நகர், 3-வது அவென்யூவில் அமைந்தகரை போலீஸ் நிலையம் எதிரே நின்ற ஆதித்யனை மர்ம கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்தது.

இதுபற்றி அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரும்பாக்கத்தை சேர்ந்த சந்தீப்குமார்(25) என்பவரை கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆதித்யனை அவர் கொலை செய்தது விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து அவர் அளித்த தகவலின்பேரில் கோயம்பேட்டில் பதுங்கி இருந்த அவரது கூட்டாளிகள் பெரும்பாக்கம் முருகன்(24), ராஜா(27), சுருளி என்ற சிலம்பரசன்(21), அரும்பாக்கம் கார்த்தி(23), செனாய் நகர் அரவிந்தகுமார் என்ற அரவிந்தன்(23), ஐ.சி.எப். சபரிநாதன் என்ற சபரி(21) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

இதையடுத்து கொலைக்கு பயன்படுத்திய மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்