காங்கேயம் தினசரி மார்க்கெட்டில் உள்ள பழக்கடையில் தீ விபத்து

காங்கேயம் பஸ்நிலையம் தினசரி மார்க்கெட் தீ விபத்தில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

Update: 2018-08-15 22:00 GMT

காங்கேயம்,

காங்கேயம் பஸ்நிலையம் தினசரி மார்க்கெட் உள்ளது. இங்கு பழக்கடை வைத்துள்ளவர் முகமதுசித்திக் நேற்று முன்தினம் வழக்கம்போல கடையில் வியாபாரத்தை முடித்துக்கொண்டு இரவு வீட்டிற்கு சென்றுவிட்டார். கடையில் வேலை செய்பவர் ஜமாலுதீன் என்பவர் தூங்கிக்கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 2.45 மணி அளவில் கடையில் இருந்து புகை வந்ததை பார்த்து விழித்துக்கொண்ட ஜமாலுதீன் மற்றும் பக்கத்து கடையில் இருந்தவர்கள் எழுந்து பார்த்தபோது கடையில் பழக்கடையில் தீ பரவி பொருட்கள் எரிந்து கொண்டிருந்தது.

இதைத்தொடர்ந்து காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணையப்பு வீரர்கள் வீரர்கள் விரைந்துவந்து தீயை அணைத்தனர். மேலும் பக்கத்து கடைகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். இந்த தீவிபத்தில் பழக்கடையில் இருந்த மின்விசிறி, டேபிள் மற்றும் பழங்கள் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்