முன் விரோதத்தில் ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய 2 பேர் கைது
மதுரையில் முன் விரோதத்தில் ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மதுரை,
மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், ஆட்டோ டிரைவர். இவருக்கும், இமயம் நகரை சேர்ந்த ஜப்பான்ராஜா(வயது 26) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் பீ.பி.குளம் மெயின் ரோட்டில் சுரேஷ்குமார் ஆட்டோவை ஓட்டி சென்றார். அப்போது ஜப்பான்ராஜா, பீ.பி.குளத்தை சேர்ந்த யோகராஜ்(26) ஆகியோர் ஆட்டோவை வழிமறித்து சுரேஷ்குமாரை கத்தியால் குத்தி விட்டு தப்பி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜப்பான்ராஜா, யோகராஜ் ஆகியோரை கைது செய்தனர்.