சிங்கம்புணரி அருகே கிராமசபை கூட்டத்தில் ப.சிதம்பரம் பங்கேற்பு
சுதந்திர தினத்தையொட்டி சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூர் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பங்கேற்றார்.
சிங்கம்புணரி,
சுதந்திர தினத்தையொட்டி சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூர் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராம.அருணகிரி, சுந்தரம், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, அ.காளாப்பூர் கிராம தலைவர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.