வானவில் :‘நீங்கள் விரும்பும் வேகம்’ ஒன் பிளஸ் 6 அறிமுகம்
ஒரு மொபைல் போனை வாங்கவும், அதன் அறிமுக விழாவைக் காணவும் இத்தனை ரசிகர்களா என்று ஆச்சரியம் தந்த விழா அது.
மும்பையில் நடந்த விழாவில் பங்கேற்ற பெருந்திரளான மக்கள் கூட்டத்தைக் கண்டபிறகுதான், அறிமுக விழாவுக்கு ஏன் பிரம்மாண்டமான உள்ளரங்கைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது புரிந்தது.
சீனாவின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ‘ஒன் பிளஸ்’ மிகவும் பிரபலம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதற்கென தனி ஒன் பிளஸ் சமூகமே உள்ளனர். இந்தியாவிலும் இத்தகைய குழுவினர் உருவாகி வருவதை ஒன் பிளஸ் 6 அறிமுக விழாவில் பார்க்க முடிந்தது.
ஆப்பிள் போனுக்கு அடுத்தபடியாக மிகுந்த எதிர்பார்ப்பு ஒன் பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு உள்ளது.
இது 6.28 அங்குல திரை கொண்டது. முந்தைய மாடலைவிட பெரிய திரையை இது கொண்டுள்ளது. குவால்காம் ஸ்நாப்டிராகன் 845 தொழில்நுட்பத்துடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இதுவரை தயாரித்துள்ள ஸ்மார்ட்போன்களில் அதி விரைவான செயல்பாடுகளைக் கொண்ட ஸ்மார்ட்போன் ஒன் பிளஸ் 6 என்று பெருமையுடன் கூறுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வழக்கம்போல அமேசான் இணையதளத்தின் மூலமே வாங்க முடியும்.
இதில் 1 கிகா பைட் டவுன்லோட் ஸ்பீட் உள்ளதால், பதிவிறக்கம் மிக விரைவாக நடைபெறும். கொரில்லா கிளாஸ் 5 இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக முன்புறத்தில் மட்டுமே கண்ணாடி பயன்படுத்தப்படும். ஆனால் ஒன் பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் முன்புறம் மட்டுமின்றி பின்பகுதியும் கண்ணாடியால் ஆனது. மிகவும் சிறப்பான வளைவுகளைக் கொண்டிருப்பதால் பார்ப்பதற்கு மிகவும் அழகிய தோற்றத்துடன் இது விளங்குகிறது.
மிரர் பிளாக், மிட்நைட் பிளாக் மற்றும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சில்க் வொயிட் வண்ணத்தில் இது வெளி வந்துள்ளது.
இதில் 16 மெகா பிக்ஸல் கேமிரா மற்றும் 20 மெகா பிக்ஸல் இரண்டாவது கேமிரா உள்ளது. இதில் 16 மெகா பிக்ஸெல் கேமிராவில் 19 சதவீதம் பெரிய சென்சார் உள்ளதால் எத்தகைய வெளிச்ச சூழலிலும் துல்லியமாக படம் பிடிக்க உதவும். இதில் மேம்பட்ட ஹெச்டிஆர் நுட்பம் உள்ளது.
இதில் படம் பிடிக்கப்பட்ட தனது புகைப்படம் ஒரு ஆங்கில வார பத்திரிகையில் அட்டைப்படமாக வெளிவந்துள்ளதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை அதிதி ராவ் தெரிவித்துள்ளார். இதிலிருந்தே படங்கள் எந்த அளவுக்கு துல்லியமாக இருக்கும் என்பதை உணர முடியும். நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தி பட உலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் விழாவில் அதிதி ராவுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார்.
6 ஜிபி ரேம், 64 ஜிபி நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ. 34,999 ஆகும். அடுத்து 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ. 39,999 ஆகும்.
மார்வல் அவெஞ்சர்ஸ் பிரியர்களுக்காக ஒன் பிளஸ் 6 மார்வல் அவெஞ்சர்ஸ் ஸ்மார்ட்போன் குறைந்த எண்ணிக்கையில் தயாரித்து வெளியிட உள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி நினைவக வசதியுடன் கூடிய இத்தகைய ஸ்மார்ட்போனின் விலை ரூ. 44,999.
ஒன் பிளஸ் 6 ஸ்மார்ட்போனுடன் புளூடூத் இயர்போனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எடை குறைந்த, ஸ்டைலான அதே சமயம் துல்லியமான இசையைக் கேட்டு மகிழும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 3,999 ஆகும். ஒன் பிளஸ் பிரத்யேக விற்பனையகத்திலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.
எக்ஸ்சேஞ்ச் சலுகை
பழைய போனுக்கு பதிலாக புதிய போனை மாற்றுவதற்கு கூடுதல் சலுகையும் வழங்கியுள்ளது. பழைய போனின் விலையை விட கூடுதலாக ரூ. 2 ஆயிரம் சலுகையை வாடிக்கையாளர்கள் பெற முடியும். இந்த சலுகை அமேசான் இணையதளத்தில் வாங்குபவர்களுக்கும், ஒன் பிளஸ் இணையதளத்தில் வாங்குபவர்களுக்கும் கிடைக்கும்.
அதேபோல எஸ்.பி.ஐ. டெபிட் கார்டு மூலம் வாங்கும் வாடிக்கையாளர்கள் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி சலுகையை பெறலாம். மேலும் ஒன்பிளஸ் 6 சார்ந்த பிற பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதன் விலையில் 20 சதவீத தள்ளு படியைப் பெறலாம்.