வானவில் : ஆச்சரியம் அளிக்கும் அமேசானின் ‘அலெக்ஸா’
தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே உள்ளது. புதுப் புது வரவுகள் இதைத்தான் உணர்த்துகின்றன.
மனிதர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் ரோபட்டுகள் ஒரு வகை. அதுபோல நமது குரல் கட்டளைக்கு ஏற்ப செயல்படும் கருவிகள் வரத்தொடங்கியுள்ளன.
அந்த வரிசையில் ஆன்லைனில் பொருள்களை விற்பனை செய்யும் அமேசான் நிறுவனத்தின் ‘அலெக்ஸா’ மிகவும் பிரபலமானது.
‘அலெக்ஸா’ என்பது ஒரு ‘மெய்நிகர் உதவியாளர்’. ஆங்கிலத்தில் சொல்வதென்றால் விர்ச்சுவல் அசிஸ்டன்ட் ( Virtual Assitant ).
உருளை போன்ற தோற்றத்தில், ஒரு டம்ளர் போன்ற தோற்றத்தில் இருக்கும் ஸ்பீக்கர் போன்று காட்சியளிக்கும் ‘அலெக்ஸா’ இன்டர்நெட் இணைப்பு மூலம் இயங்கக்கூடியது. இது நம் வீட்டில் உள்ள ஸ்மார்ட் கருவிகளுடன் இணைந்து செயல்படும். உதாரணத்திற்கு நம் வீட்டில் உள்ள ஸ்மார்ட் ரெப்ரிஜ்ரேட்டருடன் ‘அலெக்ஸா’ இணைந்து செயல்படும். அதாவது பிரிட்ஜில் உள்ள உணவுப்பொருள் காலியாகி விட்டால் இதை ‘அலெக்ஸா’ அறிந்துகொண்டு சூப்பர் மார்க்கெட்டுக்கு தகவல் கொடுத்து பொருட்களை தருவிக்கும். அல்லது உங்களுக்கு பிரிட்ஜில் இருந்த பிரட் தீர்ந்து விட்டது என்று தகவல் சொல்லும்.
இதுமட்டுமல்ல அதன் பணிகள் இன்னும் ஆச்சரியம் தரும். இதோ அவற்றில் சில...
ஊருக்குப் புறப்படுகிறீர்கள், அலெக்சாவுக்கு கட்டளையிட்டால் போதும். அது உபெர் அல்லது ஓலாவுக்கு போன் செய்து உங்களுக்கான காரை பதிவு செய்து வீட்டு வாசலுக்கு வரவழைத்துவிடும். இதற்கு உங்களது ஓலா மற்றும் உபெர் அக்கவுண்ட்டை இதனுடன் இணைத்திருந்தால் போதும்.
அடுத்து அமேசானில் பொருள்களை வெகு எளிதாக ஆர்டர் செய்யலாம். உதாரணத்துக்கு நீங்கள் ஒரு பல்பு வாங்க விரும்பினால், இதற்கு முன் உங்கள் வீட்டில் பயன்படுத்தும் பல்புகளின் விவரத்தை எடுத்துத் தரும்.
வார விடுமுறை மனைவிக்கு சமையலறையிலிருந்து விடுமுறை அளிக்க முடிவு செய்கிறீர்கள். இதற்கும் அலெக்ஸா உதவும். ஜொமோட்டோவில் உங்களது ஆர்டரை ஏற்று வீட்டுக்கு உணவுகளை வரவழைக்கும்.
வேறு வேலையாக இருக்கிறீர்கள். கிரிக்கெட் பார்க்க நேரமில்லை. அப்போது ஸ்கோரை கேட்டால் அலெக்ஸா துல்லியமாக தரும்.
உலகின் எந்த மூலையில் நிகழ்ந்த செய்தியையும் இது உங்களுக்குத் தரும். இதனால் உட்கார்ந்த இடத்திலிருந்தே நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள முடியும்.
போரடிக்கும்போது இசை கேட்கலாம். இந்தியாவில் அமேசான் பிரைம் வசதி இல்லாவிட்டாலும், இதன் மூலம் பாடல்களைக் கேட்டு மகிழலாம்.
வேலைப் பளு, வீட்டுக்கு வந்தால் சோர்வு, உங்களது மன அழுத்தத்தைப் போக்க ஜோக்குகளையும் இது அள்ளித் தரும். உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
மொபைலில் விளையாட்டுகளைத் தேர்வு செய்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
உங்கள் நண்பர் அல்லது உறவினர் வீட்டில் அலெக்ஸா இருந்தால் அவரையும் உங்கள் வீட்டிலுள்ள அலெக்ஸா மூலம் அழைத்து பேசலாம்.
புதிய மாடலில் ஸ்கிரீனும் உள்ளது. இதனால் நீங்கள் இந்திய பிரதமர் யார் என்று கேட்டால், விக்கி பீடியாவில் உள்ள அவரது உருவம் தோன்றி உங்களது கேள்விக்கு விடையளிக்கும்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்திய அலெக்சா, ஆசிய சந்தையில் கடந்த ஆண்டு அறிமுகமானது. தற்போது இந்திய சந்தையிலும் இது விற்பனைக்கு வந்துவிட்டது.
நமது வாழ்க்கையை எளிமையாக்கவும், மகிழ்ச்சியாக்கவும் தொழில் நுட்பங்களின் புதிய வரவுகள் வரத்தொடங்கியுள்ளன.