திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா: கலெக்டர் இன்று தேசிய கொடி ஏற்றுகிறார்
சுதந்திர தினவிழாவையொட்டி திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் ராஜாமணி இன்று தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். அதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
திருச்சி,
திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாட்ட நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) காலை நடக்கிறது. விழாவில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி கலந்து கொண்டு, அன்று சரியாக காலை 9.20 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெண்புறாக்கள் மற்றும் வண்ண பலூன்களையும் அவர் பறக்க விடுகிறார்.
தொடர்ந்து காவல்துறையினர் அணிவகுப்பு நடத்துகிறார்கள். அதை திறந்த ஜீப்பில் சென்றவாறு கலெக்டர் ராஜாமணி பார்வையிட்டு அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். உடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாஉல்ஹக் செல்கிறார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்படுகிறார்கள். தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கும், பல்வேறு துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியும் வழங்கப்படுகிறது. இறுதியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
திருச்சி மாநகராட்சி அலு வலக வளாகத்தில் இன்று காலை 9.20 மணிக்கு, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். திருச்சி கல்லுக்குழியில் உள்ள ரெயில்வே மைதானத்தில் திருச்சி ரெயில்வே கோட்டம் சார்பில் சுதந்திரதின விழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டி. இன்று காலை 9 மணிக்கு, ரெயில்வே கோட்ட மேலாளர் பி.உதய்குமார்ரெட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து, ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.
விமான நிலையத்தில் பாதுகாப்பு கருதி கடந்த சிலநாட்களாக பார்வையாளர் மாடம் மூடப்பட்டது. தற்போது பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர். மேலும் விமானங்களில் பார்சல் அனுப்பவும் தடை விதிக்கப்பட்டது.
இதுபோல புறநகர் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகப்படும் நபர்களை பிடித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சி காவிரி பாலம், முக்கொம்பு மேலணை, குடமுருட்டி பாலத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருச்சி ரெயில்வே சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர் உத்தரவின்பேரில் திருச்சி ஜங்ஷன் வழியாக செல்லும் ரெயில்களில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து சோதனை மேற்கொண்டனர். ரெயில்களிலும், ரெயில் நிலையத்தில் உள்ள பயணிகளிடமும் அவர்களின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டது.
ரெயில்களில் பார்சல்கள் அனுப்பிட நேற்று முதல் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை நாளை(வியாழக்கிழமை) வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி திருச்சி ரெயில் நிலையம் மின்அலங்காரத்தில் ஜொலிக்கிறது.