விதைநெல்லை இலவசமாக வழங்க வேண்டும் த.மா.கா. விவசாய அணி கூட்டத்தில் தீர்மானம்
விதை நெல்லை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று, த.மா.கா. விவசாய அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர்,
த.மா.கா. டெல்டா மாவட்ட விவசாய அணி நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. இதற்கு மாநில விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் திருப்பதி வாண்டையார், வாசு.கோவிந்தராசு, கைலாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் ராஜேந்திரன் வரவேற்றார். இதில் மாநில பொதுச் செயலாளர் தியாகராஜன், ரெங்கராசு, மாவட்ட தலைவர்கள் குமார், கணபதி, சந்திரசேகரன், சடகோபன் முத்தையா ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், வருகிற 19-ந் தேதி ஜி.கே.மூப்பனார் பிறந்தநாள் விழா விவசாயிகள் தினமாக கோவையில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் டெல்டா மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ள வேண்டும்.
வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரியில் இருந்து வீணாக கடலில் கலக்கிறது. காமராஜர் ஆட்சி காலத்தில் 13 அணைகள் கட்டப்பட்டன. அதன்பிறகு திராவிட இயக்கங்களின் ஆட்சியில் எந்த அணையும் கட்டப்படவில்லை. வரும்காலத்தில் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க காவிரி, கொள்ளிடத்தில் 100 இடங்களில் தடுப்பணைகளும், கதவணைகளும் கட்ட வேண்டும்.
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேர வில்லை. பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு வாரத்திற்குள் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.
தெலுங்கானா அரசை போல தமிழகஅரசும் விவசாயிகளுக்கு சாகுபடி செலவுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். விதைநெல்லை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் நிர்வாகிகள் ராம்மோகன், உலகநாதன், சாம்பசிவம், மீனாட்சி சுந்தரம், வெங்கட்ராமன், பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொதுச் செயலாளர் கார்த்தி நன்றி கூறினார்.
பின்னர் புலியூர் நாகராஜன் தலைமையில் விவசாய அணி நிர்வாகிகள் சிலர், தஞ்சை சாந்தப்பிள்ளை கேட்டில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு சென்று கீழ்காவிரி வடிநில வட்டம் நீர்வள ஆதாரத்துறை துணை கண்காணிப்பு பொறியாளர் ஜெயந்தியை நேரில் சந்தித்து, கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.