கவர்னர் கிரண்பெடி சுதந்திர தின வாழ்த்து

இந்திய சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் கிரண்பெடி புதுவை மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

Update: 2018-08-14 23:30 GMT

புதுச்சேரி,

சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் கிரண்பெடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

இந்திய சுதந்திர தினத்தையொட்டி மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வெவ்வேறு கலாசார பண்பாடு, மொழிகள் கொண்ட மக்கள் நம் நாட்டில் ஒற்றுமையாக வாழ்வதைப்போல் வேறு எந்த நாட்டிலும் இல்லை. தரமான கல்வி, சுகாதாரம், ஊரக மேம்பாடு, பொருளாதார கொள்கைகள் போன்றவற்றில் அடிப்படை கட்டமைப்புகள் இங்கு உள்ளது. பிரதமர் மக்களை முன்னோக்கி அழைத்து செல்கிறார்.

மேலும் புதுவையின் 57–வது அதிகார பரிமாற்ற தினத்தையொட்டி புதுவை மக்களின் வாழ்வில் அமைதி, வளம் பெருக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்