சாலையோரத்தில் கொட்டப்பட்டிருந்த காலாவதியான மருந்து, மாத்திரைகள் அகற்றப்பட்டன

வாய்மேட்டில் சாலையோரத்தில் கொட்டப்பட்டிருந்த காலாவதியான மருந்து, மாத்திரைகள் அகற்றப்பட்டன.

Update: 2018-08-14 22:15 GMT
வாய்மேடு,

நாகை மாவட்டம் வாய்மேட்டில் உள்ள திருத்துறைப்பூண்டி மெயின் சாலையில் காலாவதியான மருந்து, மாத்திரைகள், ஊசிகள், பாலிதீன் பைகள் உள்ளிட்டவைகள் சாலையோரத்தில் கொட்டப்பட்டிருந்தன. இந்த குப்பைகள் பல நாட்களாக அள்ளப்படாமல் அங்கேயே கிடந்ததால் குப்பைமேடு போல காட்சியளித்தது.

இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதை சரி செய்ய வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து “தினத்தந்தி” நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக வேதாரண்யம் வட்டாரவளர்ச்சி அலுவலர் உத்தரவின் பேரில் வாய்மேடு ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி பணியாளர்களை கொண்டு திருத்துறைப்பூண்டி சாலையோரத்தில் கொட்டப்பட்டிருந்த காலாவதியான மருந்து, மாத்திரைகளை அகற்றினர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் செய்தி வெளியிட்ட “தினத்தந்தி” நாளிதழுக்கும், காலாவதியான மருந்து, மாத்திரைகளை அகற்றிய பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்