சுதந்திர தினத்தையொட்டி புதுக்கோட்டையில் இன்று கலெக்டர் கணேஷ் தேசிய கொடியை ஏற்றுகிறார்
சுதந்திர தினத்தையொட்டி புதுக்கேட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று கலெக்டர் கணேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
புதுக்கோட்டை,
இந்திய சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்திலும் இன்று காலையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் காலை 9.20 மணிக்கு கலெக்டர் கணேஷ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். இதைத்தொடர்ந்து சமாதான புறா பறக்கவிடப்படுகிறது. இதைத்தொடர்ந்து போலீசார், ஊர்காவல் படை, தீயணைப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் கணேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் ஏற்று கொள்கின்றனர். பின்னர் தியாகிகள் கவுரவிக்கப்படுகிறார்கள்.
இதைத்தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் இதில் சிறந்த அணிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து தேசிய கீதத்துடன் சுதந்திர தினவிழா நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளாக புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தை சுத்தப்படுத்தும் பணி, ஆயுதப்படை மைதானத்தில் உள்ள தேவையில்லாத மணல், கற்களை அகற்றும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இதைப்போல ஆயுதப்படை மைதானத்தில் உள்ள கொடி கம்பத்திற்கு வர்ணம் பூசும் பணியும் முடிவுற்ற நிலையில் உள்ளது. மேலும் சுதந்திர தின விழாவிற்கு வரும் முக்கியஸ்தர்கள் அமர்வதற்கும், சுதந்திர தின விழாவை பார்வையிட வரும் பார்வையாளர்கள் அமர்வதற்கும் பந்தல்கள் அமைக்கும் பணியும் முடிவுற்ற நிலையில் உள்ளது.
இதைப்போல புதுக்கோட்டை மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி அசம்பாவிதங்கள் ஏதுவும் ஏற்படாமல் இருக்கும் வகையில் சுதந்திர தினவிழா நடைபெற உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானம், புதுக்கோட்டை ரெயில் நிலையம், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.