கொள்ளிடம் ஆற்றில் வெள்ள பெருக்கு திருமானூரில் செங்கல் சூளைகளை தண்ணீர் சூழ்ந்தது
கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் திருமானூரில் உள்ள செங்கல் சூளைகளை தண்ணீர் சூழ்ந்தது.
திருமானூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றிய பகுதியில் திருவெங்கனூர், விழுப்பனங்குறிச்சி சுள்ளங்குடி, ஏலாக்குறிச்சி, அழகியமணவாளன், நதியனூர், தூத்தூர் போன்ற கொள்ளிட கரையோர கிராமங்களில் செங்கல் உற்பத்தி தொழிலாளர்கள் கொள்ளிடம் ஆற்று பகுதியில் செங்கல் உற்பத்தி தொழில் செய்து வருகிறார்கள். திருமானூர் ஒன்றியம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெறும் அனைத்து கட்டுமான தொழில்களுக்கும் இந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் செங்கல்தான் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்த செங்கல் உற்பத்தி தொழிலில் 100-க்கும் மேற்பட்ட வேலையாட்களை வைத்து செய்து வருகின்றனர். இந்நிலையில் திருமானூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் நேற்று முன்தினம் முதல் அதிகமான வெள்ள நீர் வருவதால் கொள்ளிடம் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் செல்கிறது.
மேலும் கொள்ளிடம் ஆற்றில் அதிகமான தண்ணீர் வந்ததால் ஆற்று படுகையில் உள்ள செங்கல் சூளைகளை தண்ணீர் சூழ்ந்தது. மேலும், எரியூட்டப்பட்ட ஒரு செங்கல் சூளையில், சுமார் 1 லட்சம் செங்கல் வரை இருக்கும். எரியூட்டப்பட்ட செங்கல் சூளையில் தண்ணீர் சூழ்ந்ததால் செங்கல் ஊறி சரிந்து விழுந்து சேதமடைந்தும் வருகிறது. மேலும், செங்கல் சூளையில் செங்கல் தயாரிக்க தேவையான தண்ணீருக்கு அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் அதன் டீசல் எஞ்சின்கள் தண்ணீரில் மூழ்கி போய்விட்டன. பல லட்சம் எரியூட்டப்பட்ட செங்கல்கள் மற்றும் எரியூட்ட தயார் நிலையில் இருந்த பல லட்சம் செங்கல்கள் அனைத்தும் கொள்ளிட ஆற்று தண்ணீரில் மூழ்கியுள்ளன.