ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் விரைவில் திறக்கப்படும்

சாத்தான்குளத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் விரைவில் திறக்கப்படும் என, மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் தெரிவித்தார்.

Update: 2018-08-14 21:45 GMT
சாத்தான்குளம், 


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. நீதிமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள், வக்கீல்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து சாத்தான்குளம் யூனியன் அலுவலக வளாகத்தில் புதிதாக ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, யூனியன் அலுவலக வளாகத்தில் ரூ.5 கோடியே 74 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு உள்ளது.

இதனை மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் அங்கு புதிதாக கட்டப்பட்ட நீதிபதிகள் குடியிருப்புகளையும் பார்வையிட்டார். அங்கு அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளனவா? என்பது குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் நீதிபதி இளங்கோவன் கூறுகையில், ‘சாத்தான்குளத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார். மாவட்ட முதன்மை நீதிபதியின் ஆய்வின் போது, மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவாஜி செல்லையா, குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணன், சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்