நிலக்கரி நிறுவனத்தில் 480 பணியிடங்கள்

நிலக்கரி நிறுவனத்தில் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு 480 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2018-08-14 09:07 GMT
மத்திய நிலக்கரித் துறையின் கீழ் செயல்படும் நிலக்கரி நிறுவனங்களில் ஒன்று ‘சென்ட்ரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட்’. பொதுத்துறை நிறுவனமான இதில் தற்போது மைனிங் சர்தார் மற்றும் எலக்ட்ரீசியன் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 480 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் மைனிங் சர்தார் பணிக்கு 269 இடங்களும், எலக்ட்ரீசியன்/ டெக்னீசியன் பணிகளுக்கு 211 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 10-8-2018-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி


மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள் எலக்ட்ரீசியன் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மைனிங் சர்தார் சான்றிதழ் பெற்றவர்கள் மைனிங் சர்தார் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 10-9-2018-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தவர்கள், 20-9-2018-ந் தேதிக்குள் நகல் விண்ணப்பம் சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.centralcoal fields.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்