மத்திய அரசு நிறுவனத்தில் வேலை
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று மெக்கான். உலோகவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமான இது மத்திய உருக்குத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
உருக்கு நிறுவனமான ‘செயில்’ நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்த நிறுவனத்தில் தற்போது உதவி திட்ட பொறியாளர், திட்ட பொறியாளர், இளநிலை நிர்வாக அதிகாரி, முதுநிலை திட்ட பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 205 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவை காண்டிராக்டு அடிப்படையிலான ஒப்பந்த பணியிடங்களாகும்.
என்ஜினீயரிங் மற்றும் பி.டெக், ஆர்கிடெக் போன்ற பட்டப்படிப்பு படித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 39 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது, மதிப்பெண் சதவீதம் போன்றவற்றில் அரசு விதிகளின்படி தளர்வுகள் அனுமதிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.meconlimited.co.in என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 20-8-2018-ந் தேதியாகும்.