ஊரப்பாக்கத்தில் மின்சார ரெயிலை மறித்து பயணிகள் போராட்டம்
விரைவு மின்சார ரெயிலை மீண்டும் இயக்க வலியுறுத்தி, ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தில், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை சென்ற மின்சார ரெயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வண்டலூர்,
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ந்தேதி, மின்சார ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த 5 வாலிபர்கள், அங்குள்ள தடுப்பு சுவரில் மோதி பலியானார்கள். இதையடுத்து எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது.
இதனால் குறிப்பிட்ட நிறுத்தங்கள் மட்டுமே நின்றுசெல்லும் விரைவு மின்சார ரெயில்கள், சாதாரண மின்சார ரெயில்களாக இயக்கப்படுவதால் செங்கல்பட்டு, திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரை வரை அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்றுசெல்கிறது.
இதன்காரணமாக மின்சார ரெயில்கள் தாமதமாக செல்வதால் காலை நேரங்களில் அலுவலகம், கல்லூரிகளுக்கு குறித்தநேரத்தில் செல்லமுடியவில்லை என சென்னை புறநகர் பகுதியில் வசிக்கும் ரெயில் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தில் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள், அலுவலகங்களில் வேலை செய்வோர் என சென்னை செல்வதற்காக ஏராளமான பயணிகள் மின்சார ரெயிலுக்கு காத்து நின்றனர். ஆனால் நீண்டநேரம் ஆகியும் ரெயில் வரவில்லை. காலை 8.15 மணியளவில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சாரரெயில் வந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட பயணிகள், மீண்டும் விரைவு மின்சார ரெயிலை இயக்கவேண்டும் என வலியுறுத்தி அந்த மின்சார ரெயிலை மறித்து தண்டவாளத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் ரெயிலின் முன்பகுதியில் ஏறி நின்றும் மறியலில் ஈடுபட்டனர். மேலும் சில பயணிகள், தாம்பரம்-செங்கல்பட்டு தண்டவாளத்திலும் நின்று மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் இருமார்க்கத்திலும் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. திருமால்பூர், செங்கல்பட்டில் இருந்து சென்னை வந்த மின்சார ரெயில்களும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, திருமால்பூர் சென்ற மின்சார ரெயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் மற்றும் தாம்பரம் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து, ரெயில் மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி ரெயில்வே உயர் அதிகாரிகளுடன் பேசி மீண்டும் விரைவு மின்சார ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு 9.15 மணியளவில் ரெயில் மறியலை கைவிட்டனர். அதன்பிறகு மின்சார ரெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு சென்றன. ரெயில் மறியல் காரணமாக 1 மணிநேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதனால் மறைமலைநகர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்ற பயணிகள், மறியல் காரணமாக உரிய நேரத்தில் அலுவலகத்துக்கு செல்லவேண்டும் என்பதற்காக அருகில் உள்ள பஸ் நிலையங்களுக்கு படையெடுத்தனர். இதனால் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பயணிகள் முண்டியடித்தபடி பஸ்சில் ஏறிச்சென்றனர்.
இதன்காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ்கள் ஊர்ந்தபடியே சென்னைக்கு சென்றன. ரெயில் மறியல் காரணமாக அவசரமாக வேலைக்கு செல்லவேண்டும் என பஸ்சில் வந்தும், போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்லமுடியாமல் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
இதேகோரிக்கையை வலியுறுத்தி கடந்த 1-ந்தேதி கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்திலும் மின்சார ரெயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.