கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் 10 ஆயிரம் மணல் மூட்டைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் முன்னெச்சரிக்கையாக 10 ஆயிரம் மணல் மூட்டைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2018-08-13 22:45 GMT
கொள்ளிடம்,

நாகை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையொட்டி ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆற்றின் கரை வலுவிழந்து உடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் உடைப்பு ஏற்படும்போது அதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொள்ளிடம் பொதுப்பணிதுறை அலுவலக வளாகத்தில் 10 ஆயிரம் மணல் மூட்டைகளை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் கொள்ளிடம் தெற்கு ராஜன் வாய்க்காலிலும் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், வாய்க்காலில் வலுவிழந்த கரைகளில் மணல் மூட்டைகளை முன்கூட்டியே அடுக்கி வைக்க முடிவு செய்துள்ளனர். மணல் மூட்டைகள் தயார் செய்யும் பணியை உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் விவேகானந்தன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பாசன ஆய்வாளர்கள் சீனிவாசன், மோகன் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்