பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்
கொள்ளிடம் அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகி தீக் குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொள்ளிடம்,
நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கி மூலம் விவசாயிகளுக்கு கடந்த 2016-17-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையை காப்பீட்டு நிறுவனம் 69 சதவீதம் ஒதுக்கீடு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை 360 விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு அறிவிக்கப்பட்ட பயிர்காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்டகுழு உறுப்பினர் விஜய் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அப்போது திடீரென சிவப்பிரகாசம், பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது அங்கு இருந்த கொள்ளிடம் போலீசார், அவரை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பயிர்க்காப்பீட்டு தொகை பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.