பயங்கரவாதத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அசோக் சவான் குற்றச்சாட்டு

பெருகிவரும் பயங்கரவாத விஷத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என மராட்டிய காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2018-08-13 00:22 GMT
மும்பை,

பயங்கரவாத தடுப்பு படையினர் சமீபத்தில் குண்டுவெடிப்பு சதித்திட்டம் தீட்டியதாக இந்து அமைப்பை சேர்ந்த வைபவ் ராவுத், சரத் கலாஸ்கர், சுதன்வா கோந்தலேகர் ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களின் வீட்டில் இருந்து பல்வேறு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கைதானவர் களில் வைபர் ராவுத் பசு பாதுகாப்பு அமைப்பு ஒன்றையும் நடத்தி வந்தவர் ஆவார்.

இந்த சம்பவம் குறித்து மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் அசோக் சவான் கூறியதாவது:-

கைது செய்யப்பட்ட 3 பேரும் குறிப்பிட்ட 2 வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் ஆவர். இந்த அமைப்புகள் மீது நடவடிக்கை எடுப்பதை மாநில அரசு வேண்டுமென்றே தவிர்த்து வருகிறது. இந்த அமைப்புகள் மாநிலத்தில் பயங்கரவாதம் எனும் விஷத்தை பரப்பி வருகிறது.

இதேநேரத்தில் பா.ஜனதா தலைமையிலான அரசு இந்த அமைப்புகளின் தலைவர் களை பாதுகாக்கும் நடவடிக் கைகளில் ஈடுபட்டு வருகிறது. அரசியல் ரீதியிலான ஆதாயங்களை பார்க்காமல் பயங்கரவாதம் எனும் விஷத்தை அரசு முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.

இவ்வாறு அசோக் சவான் கூறினார். 

மேலும் செய்திகள்