பெங்களூரு–மைசூரு இடையே 9 ரெயில்களின் வேகம் அதிகரிப்பு தென்மேற்கு ரெயில்வே தகவல்
பெங்களூரு–மைசூரு இடையே இயங்கும் 9 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது என்று தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு–மைசூரு இடையே இயங்கும் 9 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது என்று தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.
வேகம் அதிகரிப்புபெங்களூரு–மைசூரு இடையேயான இரட்டை ரெயில்பாதை மற்றும் மின்மயமாக்கல் பணி முடிவடைந்ததை தொடர்ந்து 9 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில்களின் எண்கள் மாற்றப்படாத நிலையில் ரெயில்கள், அதிவிரைவு ரெயில்களாக இயங்கும்.
இதன் காரணமாக, பெங்களூருவில் இருந்து மைசூருவை சென்றடைவது, மைசூருவில் இருந்து பெங்களூருவை வந்தடையும் நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு:–
பெங்களூரு–மைசூரு* மயிலாடுத்துறை–மைசூரு ரெயில்(வண்டிஎண்:16231) பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு காலை 8.30 மணிக்கு மைசூருவை சென்றடையும்.
* யஷ்வந்தபுரம்–மைசூரு ரெயில் (16024) யஷ்வந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு மைசூருவை சென்றடையும்.
* ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும் பெங்களூரு சிட்டி–கண்ணூர் ரெயில்(16517) மற்றும் பெங்களூரு சிட்டி–கார்வார் ரெயில் (16523) ஆகியவை பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.00 மணிக்கு மைசூருவை சென்றடையும்.
மைசூரு–பெங்களூரு* மைசூரு–மயிலாடுத்துறை ரெயில்(16232) மைசூருவில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மாலை 6.45 மணிக்கு பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தை வந்தடையும்.
* மைசூரு–யஷ்வந்தபுரம் ரெயில்(16023) மைசூருவில் இருந்து காலை 8.25 மணிக்கு புறப்பட்டு காலை 10.55 மணிக்கு யஷ்வந்தபுரத்தை வந்தடையும்.
* மைசூரு–சாய்நகர் சீரடி ரெயில் (16217) அதிகாலை 5.30 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டு காலை 8 மணிக்கு பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தை வந்தடையும்.
* ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும் கண்ணூர்–பெங்களூரு சிட்டி ரெயில் (16518), கார்வார்–பெங்களூரு சிட்டி ரெயில்(16524) ஆகியவை காலை 5.30 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டு காலை 8 மணிக்கு பெங்களூருவை வந்தடையும்.
இந்த ரெயில் நேர மாற்றங்கள் வருகிற 15–ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன.
மேற்கண்ட தகவல் தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.