சின்னசேலம் அருகே இருதரப்பினர் மோதல்; வீடுகள் சூறை, போலீஸ் குவிப்பு
சின்னசேலம் அருகே இருதரப்பினர் மோதிக் கொண்ட சம்பவத்தில் வீடுகள் சூறையாடப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சின்னசேலம்,
இதில் ஆத்திரமடைந்த பெரியசாமி தனது ஆதரவாளர்கள் அரவிந்தன், சுரேஷ், சந்தோஷ் ஆகியோருடன் சேர்ந்து சந்திரசேகரை தாக்க முயன்றார். இதில் சுதாரித்துக் கொண்ட சந்திரசேகர் அங்கிருந்து தென்சிறுவளூருக்கு திரும்பினார்.
இதற்கிடையே நாட்டார்மங்கலத்தை சேர்ந்த ஆனந்தன் மகன் சுந்தரபாண்டியன் என்பவர் சந்திரசேகரை செல்போனில் தொடர்பு கொண்டு சமாதானம் பேசினார். அப்போது அவர்கள் செல்போனில் பேசும் போதே வாய்த் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மேலும் ஆத்திரமடைந்த சந்திரசேகர், மீண்டும் நாட்டார்மங்கலத்துக்கு வந்தார்.
இதை பார்த்த பெரியசாமி, அரவிந்தன், சுரேஷ், சந்தோஷ் ஆகியோர் சந்திரசேகரை அருகே உள்ள மாரியம்மன் கோவிலுக்குள் தூக்கி சென்று சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த கீழ்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த சந்திரசேகரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே சந்திரசேகர் தாக்கப்பட்டது பற்றி அறிந்த அவரது உறவினர்கள் நாட்டார்மங்கலத்துக்கு வந்து, சுந்தரபாண்டியன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதை தடுக்க முயன்ற ஆனந்தனை அவர்கள் தாக்கினர்.
மேலும் ஆத்திரம் தீராத அவர்கள் அருகில் இருந்த அரவிந்தன் என்பவரது வீட்டுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடினர். பின்னர் அவரது வீட்டின் முன்பு நின்ற மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதற்கிடையே இதுபற்றி அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கோமதி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் தகராறில் ஈடுபட்ட தென்சிறுவளூர் மற்றும் நாட்டார்மங்கலத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.