7–ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு

புதுச்சேரியில் வருகிற 7–ந் தேதி நடைபெறவுள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு அளித்துள்ளது.

Update: 2018-08-04 22:00 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி மாநில இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை எதிர்த்து வருகிற 7–ந் தேதி நடைபெறும் போராட்டத்தின் ஒருபகுதியாக புதுச்சேரியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதென மோட்டார் துறை சார்ந்தவர்கள், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இணைந்து முடிவு செய்துள்ளன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனது முழுமையாக ஆதரிக்கிறது.

புதுவையில் நடைபெறும் மோட்டார் வாகன வேலை நிறுத்தத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்