தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் திருவுருவ பவனி

தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் அன்னையின் திருவுருவ பவனி நேற்று இரவு நடந்தது.

Update: 2018-08-04 22:00 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் அன்னையின் திருவுருவ பவனி நேற்று இரவு நடந்தது.

பனிமய மாதா ஆலயம்

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய 436–வது ஆண்டு திருவிழா கடந்த 26–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஜெபமாலை, மறையுரை ஆசீர், நற்கருணை ஆசீர், கூட்டு திருப்பலி ஆகியவை நடந்தன. விழாவையொட்டி கடந்த 29–ந் தேதி புதுநன்மை, நற்கருணை பவனி விழா நடந்தது.

10–வது திருநாளான நேற்று காலை 8.30 மணிக்கு நோயுற்றோருக்கான சிறப்பு திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்கான திருப்பலியும், இரவு 7 மணிக்கு பி‌ஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடந்தது.

திருவுருவ பவனி

தொடர்ந்து இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அன்னையின் திருவுருவம் வைக்கப்பட்டு ஆலயத்தை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்