தட்டார்மடம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி

தட்டார்மடம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார். மற்றொருவர் காயம் அடைந்தார்.

Update: 2018-08-04 21:30 GMT
தட்டார்மடம், 

தட்டார்மடம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார். மற்றொருவர் காயம் அடைந்தார்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

மோட்டார் சைக்கிள்கள் மோதல்

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள பூச்சிக்காட்டைச் சேர்ந்தவர் பங்கராஸ் மகன் கிங்ஸ்லி (வயது 34) கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் தட்டார்மடத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

தட்டார்மடம் பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது, எதிரே போலையர்புரத்தைச் சேர்ந்த கிங்ஸ்டன் (34) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

பலி

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த கிங்ஸ்லி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கிங்ஸ்டன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

விபத்தில் இறந்த கிங்ஸ்லியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்