திருமானூர் பகுதி கோவில்களில் ஆடி 3-வது வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

ஆடி 3-வது வெள்ளியை முன்னிட்டு சுவாமிகளுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Update: 2018-08-04 22:30 GMT
திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள அரண்மனைக்குறிச்சி விநாயகர், மாரியம்மன் கோவில்களில் ஆடி 3-வது வெள்ளியை முன்னிட்டு சுவாமிகளுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சந்தன காப்பு அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர் களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் திருமானூர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மகாமாரியம்மன் கோவில், ஏலாக்குறிச்சியில் உள்ள சுந்தரசோழ அய்யனார் கோவில், பெரியமறை உஜ்ஜினி மகாளியம்மன் கோவில், மேலராமநல்லூர் பச்சையம்மன் கோவில், திருமழபாடி வைத்தியநாதசுவாமி, கீழப்பழுவூர் ஆலந்துறையார், மறவனீசுவரர், காமரசவல்லி கார்கோடேஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்