முதுகுளத்தூரில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 20 பேர் காயம்

முதுகுளத்தூரில் இருந்து ராமேசுவரத்திற்கு சென்ற அரசு பஸ்சும், ராமநாதபுரத்தில் இருந்து முதுகுளத்தூருக்கு வந்த அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

Update: 2018-08-04 21:45 GMT

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூரில் இருந்து ராமேசுவரத்திற்கு சென்ற அரசு பஸ்சும், ராமநாதபுரத்தில் இருந்து முதுகுளத்தூருக்கு வந்த அரசு பஸ்சும் கலை அறிவியல் கல்லூரி அருகே உள்ள வளைவில் வந்த போது, எதிர்பாராதநிலையில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

 இந்த விபத்தில் தூரி ராமபாண்டி (வயது 39), முதுகுளத்தூர் சிவாஜி (53), ராக்கம்மாள்(35), கூரிசெல்வி (26), பூசேரி கோவிந்தராஜ், நெடுங்குளம் பழனியம்மாள்(35), விளங்குளத்தூர் உடையாள்(50), பெரிய இலை சகுந்தலா, டிரைவர்கள் சம்பத்குமார்(43), பசுபதிராஜா(45) உள்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து முதுகுளத்தூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுதர்சனன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் ஒன்று திரண்டதால், டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் சிகிச்சை அளிக்க முடியாமல் திணறினர். பின்பு போலீசார் அங்கு வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ராமநாதபுரம்–முதுகுளத்தூர் அரசு பஸ் டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்