ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடன்
ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடன் பெறலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் வாழ்நாள் காப்பீடு மட்டுமின்றி குறைந்த வட்டி விகிதத்தில் கடனும் அளிக்கின்றன.
காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது பிற நிதிசார் நிறுவனங்கள் அல்லது வங்கிகள் ஆயுள் காப்பீட்டுப் பாலிசியை பிணையாகக் கொண்டு இக்கடனை அளிக்கின்றன.
ஆனால் இந்தக் கடன் திட்டம், டெர்ம் இன்சூரன்ஸ், ஈக்விட்டி சார்ந்த திட்டங்களுக்குக் கிடையாது.
கடன் அளவானது பாலிசியின் வகை மற்றும் சரண்டர் மதிப்பு இரண்டையும் பொறுத்து மாறுபடும்.
பாலிசியின் சரண்டர் மதிப்பில் இருந்து குறிப்பிட்ட சதவீத அளவில் கடன் தொகை வழங்கப்படும். அதிகபட்சம் 80 முதல் 90 சதவீதம் வரை சரண்டர் மதிப்பில் இருந்து கடன் பெற முடியும்.
இந்தக் கடன் திட்டம், மணி பேக் பாலிசி மற்றும் எண்டோவ்மென்ட் பாலிசிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தை காப்பீட்டு பாலிசி பத்திரம் அல்லது ஆவணத்துடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.
கடன் தொகையைப் பெறுவதற்கான கணக்கு விவரங்கள் மற்றும் ரத்து செய்யப்பட்ட காசோலையை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
காப்பீட்டு நிறுவனம் அல்லது நிதி நிறுவனமானது கடன் தொகையைச் செயல்படுத்துவதற்காக ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகையை கட்டணமாகப் பெறும்.
தனிநபர் கடனை விட காப்பீட்டு பாலிசியின் கீழ் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் அளிக்கப்படுகிறது. ஒருவேளை வட்டித் தவணையானது பாலிசி சரண்டர் மதிப்பை விட அதிகமாக நீண்டால் பாலிசிதாரர் அவரது பாலிசியை இழக்க நேரிடும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.