கடம்பத்தூர், காக்களூரில் இன்று மின்தடை
கடம்பத்தூர் துணை மின்நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கடம்பத்தூர், பிரயாங்குப்பம், புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆர்.நகர், ஸ்ரீதேவிகுப்பம், செஞ்சிபானம்பாக்கம், மணவூர், விடையூர், ஆட்டுப்பாக்கம், திருப்பாச்சூர், கைவண்டூர், பெரியகளகாட்டூர், சின்னகளகாட்டூர், அகரம், வெண்மனம்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் தடைபட்டிருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே போல திருவள்ளூரை அடுத்த காக்களூர் துணை மின்நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காக்களூர் சிட்கோ, திருவள்ளூர் நகரம், மோதிலால் தெரு, சி.வி.நாயுடு சாலை, வள்ளூவர் புரம், ஈக்காடு, செவ்வாப்பேட்டை, புல்லரம்பாக்கம், பூண்டி, ஒதப்பை, மெய்யூர், குஞ்சலம், பென்னலூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் தடைசெய்யப்பட்டிருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.