அரசு பஸ்–மோட்டார் சைக்கிள் மோதல்: ரெயில்வே ஊழியர் பலி சங்கரன்கோவில் அருகே பரிதாப சம்பவம்

சங்கரன்கோவில் அருகே, அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ரெயில்வே ஊழியர் பரிதாபமாக பலியானார்.

Update: 2018-08-03 22:00 GMT

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் அருகே, அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ரெயில்வே ஊழியர் பரிதாபமாக பலியானார்.

ரெயில்வே ஊழியர்

சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக்கண்ணி ஊரைச் சேர்ந்த வேலாயுதம் மகன் பாலமுருகன் (வயது 45). ரெயில்வே ஊழியர். இவர் ஸ்ரீவில்லிபுத்து£ர் ரெயில் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை பணியை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிரே ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. குவளைக்கண்ணி ஊரில் பாலமுருகன் வீடு அருகில் உள்ள திருப்பத்தில் மோட்டார் சைக்கிளை திருப்பி உள்ளார். அப்போது, அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகின. இதில் பாலமுருகன் மோட்டார் சைக்கிளில் இருந்து து£க்கிவீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பரிண்டு ராஜேந்திரன் மற்றும் போலீசார் அவருடைய உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அரசு பஸ் டிரைவரான மாங்குடியை சேர்ந்த தாமோதரன் மகன் சுரேஷ்பாண்டியன் (42) என்பவரிடம் கரிவலம்வந்தநல்லு£ர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பாலமுருகனுக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். தனது சொந்த ஊரில் வீட்டின் அருகில் விபத்தில் அவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்