பஸ் பயண அட்டை வழங்கும் வரை பள்ளி சீருடை அணிந்து மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம்

பஸ் பயண அட்டை வழங்கும் வரை பள்ளி சீருடை அணிந்து மாணவர்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2018-08-02 22:45 GMT
கரூர்,

தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், ஆண்டான்கோவில் கிழக்கு ஊராட்சி, ரெங்கராஜ் நகர் முதல் மற்றும் 2-வது தெரு, சோமசுந்தரம் நகர், உதயா நகர் போன்ற குடியிருப்புகளிலுள்ள சிறு, சிறு கழிவுநீர் கால்வாய்களை இணைக் கும் வகையில் ரூ.29 லட்சத்து 63 ஆயிரத்தில் பெருவழி கால்வாய் அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இந்த பணியை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசிய தாவது:-

கரூர் மாவட்டத்தில் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் ஆண்டான்கோவில் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கால்வாய் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை இன்று (நேற்று) நடத்தப்பட்டது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். தமிழகத்திலுள்ள பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்காக விலையில்லா பஸ் பயண அட்டை அச்சடிக்கப்பட்டு விரைவில் வழங்கப்படவுள்ளது.

அதுவரை பள்ளி சீருடையில் இருந்தாலே அனைத்து மாணவ- மாணவிகளையும் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கலாம் என்று ஓட்டுனர் மற்றும் கண்டக்டருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடைநில்லா பஸ், பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாளை (இன்று) நடைபெற உள்ள ஆடிப்பெருக்கு விழாவையொட்டி காவல்துறை, வருவாய்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து ஆற்றோரங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். பொதுப்பணித்துறையினரால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பொதுமக்கள் குளிக்க வேண்டும். மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது அதிக கண்காணிப்பு செலுத்தி பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, பாலச்சந்தர், பொறி யாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் எஸ்.வேலுசாமி, பி.மார்க்கண்டேயன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ரெயின்போ ஆர்.சேகர், கே.முருகேசன், ஊராட்சி செயலாளர் ரெயின்போ மணிகண்டன், ஆண்டான்கோவில் கிழக்கு ஊராட்சி செயலர் சசி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்