பூபதிகண்ணன் கொலை செய்யப்பட்டது எப்படி? கைதான சவுந்தர்யா பரபரப்பு வாக்குமூலம்
அரசு அதிகாரியான பூபதிகண்ணன் கொலை செய்யப்பட்டது எப்படி? என்பது குறித்து கைதான சவுந்தர்யா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருச்சி,
திருச்சி ராஜா காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பூபதிகண்ணன்(வயது 45). இவர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளராக(வேளாண்மை) பணியாற்றி வந்தார். இவரது மனைவி அனுராதா, திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். பூபதிகண்ணன் புதுக்கோட்டைக்கு வேலைக்காக தினமும் சொந்த காரில் சென்று வந்து கொண்டிருந்தார்.
இந்தநிலையில் கடந்த 28-ந் தேதி காலை பூபதிகண்ணன் திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் மாத்தூர் அருகே காட்டுப்பகுதியில் அவரது காருக்கு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு பூபதிகண்ணனின் கள்ளக்காதலி சவுந்தர்யாவை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது சவுந்தர்யா போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் வேளாண்மைத்துறையில் பணியாற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளரான பூபதிகண்ணன் அலுவலகத்தில் நான் டைப்பிஸ்டாக வேலை செய்து வந்தேன். ஒரே அலுவலகத்தில் வேலை என்பதாலும், அவர் உயர் அதிகாரி என்பதாலும் அவரின் நட்பு எனக்கு கிடைத்தது. குடும்ப சூழ்நிலையை சொல்லி பல லட்ச ரூபாய் அவரிடம் பெற்றுள்ளேன். இதனால் எங்களுக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
தினமும் திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு அவர் காரில் செல்வது வழக்கம். நான் மாத்தூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து அவருடன் காரில் அலுவலகம் செல்வதும், பணி முடிந்து திரும்பும் வேளையில் மாத்தூரில் இறங்கி வீட்டிற்கு சென்று விடுவதும் வழக்கம். இப்படி அலுவலக பணி நாட்களில் தினமும் அவருடன் காரில் சென்று வருவதை வழக்கமாக்கி கொண்டேன்.
பணிமுடிந்து ஊர் திரும்பும் வேளையில் தேவைப்படும்போது, மாத்தூர் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு காரில் செல்வோம். அங்கு காரிலேயே இருவரும் உல்லாசம் அனுபவிப்போம். பின்னர் என்னை மாத்தூர் பஸ் நிறுத்தத்தில் இறக்கி விட்டதும் வீடு திரும்பி விடுவேன். கடந்த 27-ந் தேதி மாலை புதுக்கோட்டையில் பணிமுடிந்து காரில் திரும்பி கொண்டிருந்தோம். அப்போது அவர், உடலுறவில் ஈடுபட வேண்டும் என்றார். நானும் சம்மதித்தேன். அதன்படி, மாத்தூர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு காரில் சென்றோம்.
அங்கு காரில் வைத்து உல்லாசம் அனுபவித்தோம். பின்னர் பூபதிகண்ணன் சிறுநீர் கழிக்க வேண்டும் எனக்கூறி காரில் இருந்து இறங்கி சற்று ஒதுக்குப்புறமான இடத்துக்கு சென்றார். சிறிது நேரத்தில் கத்திக்குத்து காயங்களுடன் அலறியபடி ரத்தம் சொட்டச் சொட்ட ஓடிவந்தார். நானும் பயந்தில் அலறினேன். அப்போது அவரை பின்தொடர்ந்து கையில் கத்தியுடன் வந்த ஆசாமி, “வெளியில் சொன்னால் உன்னையும் கொன்று விடுவேன்” என மிரட்டினான். நான் பயத்தில் ஆடிப்போய் நின்றேன். பின்னர் கத்தியை என் கையில் கொடுத்து, நீயும் 2 குத்து கத்தியால் பூபதிகண்ணனை குத்து என்று மிரட்டினான். வேறுவழியின்றி நானும் கத்தியால் அவரை குத்தினேன்.
அதன்பின்னர் கத்தியை கையில் வாங்கிய மர்ம ஆசாமி மீண்டும் அவரை கத்தியால் குத்தினான். பூபதி கண்ணன் கார் அருகிலேயே சரிந்து விழுந்து விட்டார். நான், அவர் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். கொலைகார ஆசாமி யார் என்றே எனக்கு தெரியாது.
பூபதிகண்ணனிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கியதை பலமுறை அவர் என்னிடம் திரும்ப கேட்டார். ஆனால், நான் செலவாகி விட்டது என்று கொடுக்காமல் காலம் கடத்தினேன். அதனால், எங்கள் இருவருக்கும் சிலவேளைகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது உண்மைதான். ஆனால், அவரை கொலை செய்யும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை நடந்த பதற்றத்தில் காரில் கழற்றிப்போட்ட உள்ளாடையை சவுந்தர்யா எடுக்க மறந்து, அதை காரிலேயே விட்டு சென்று விட்டார். போலீசார் காரில் கிடந்த உள்ளாடையை வைத்துதான் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்தபோதுதான் கொலை நடந்துள்ளது என்பதை உறுதி செய்ய முடிந்தது.
கொலையுண்ட பூபதிகண்ணனின் கழுத்தில் கிடந்த சங்கிலியை எடுத்துச்சென்று விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ள சவுந்தர்யா, உள்ளாடையை எப்படி மறந்தார் என்பதுதான் புதிராக உள்ளது.