வேலூர் மாவட்டத்தில் 18 தாசில்தார்கள் பணியிட மாற்றம் கலெக்டர் உத்தரவு

வேலூர் மாவட்டத்தில் 18 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.

Update: 2018-08-02 21:45 GMT

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் 18 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:–

வேலூர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) தாசில்தாராக பணிபுரிந்த முரளி, கலெக்டர் அலுவலக பொதுமேலாளராகவும், வாலாஜா தாசில்தார் விஜயகுமார், வேலூர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) தாசில்தாராகவும், வேலூர் ஆதிதிராவிடர் நலத்துறை தனிதாசில்தார் ரமேஷ், வேலூர் தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த தாசில்தார் பாலாஜி, தேர்தல்பிரிவு தனிதாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த தாசில்தார் சச்சிதானந்தம், மாவட்ட பேரிடர் மேலாண்மை தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த பூமா வாலாஜா தாசில்தாராகவும் அரக்கோணம் மண்டல துணை தாசில்தாராக பணிபுரிந்த சரவணமுத்து, வேலூர் ஆதிதிராவிடர் நலத்துறை தனிதாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு–சென்னை விரைவுப்பாதை தடுப்பு தனிதாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த பாக்கியநாதன், வாலாஜா–ஆந்திரா தேசிய நெடுஞ்சாலை நிலஎடுப்பு தனிதாசில்தாராகவும், திண்டிவனம்–நகரி அகல ரெயில்பாதை நில எடுப்பு அலகு–2 தனிதாசில்தாராக பணியாற்றிய ரமேஷ், ராணிப்பேட்டை வருவாய் கோட்ட அலுவலகத்தில் நேர்முக உதவியாளராகவும், அங்கு பணிபுரிந்த பாஸ்கரன், வாலாஜா–திண்டிவன்–நகரி அகல ரெயில்பாதை நில எடுப்பு தனிதாசில்தராகவும், திருப்பத்தூர் தலைமையிடத்து துணை தாசில்தார் சாந்தி, ஆம்பூர் நகர நிலவரித்திட்ட தனி தாசில்தாராகவும், வேலூர் உதவி ஆணையர் (கலால்) அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த வத்சலா, பெங்களூரு–சென்னை விரைவுப்பாதை நிலஎடுப்பு தனிதாசில்தாராகவும், திருப்பத்தூர் நகர நிலவரித்திட்ட தனிதாசில்தாராக பணிபுரிந்த பூங்கொடி, ஏலகிரி மலைக்கிராம வருவாய் பின் தொடர்பணி தனி தாசில்தாராகவும், வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் டி பிரிவில் தலைமை உதவியாளராக பணிபுரிந்த பாலாஜி, அரக்கோணம், சிப்காட்–பனப்பாக்கம் நில எடுப்பு தனிதாசில்தாராகவும் உள்பட 18 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்