கடந்த 2 மாதத்தில் மட்டும் எலிக்காய்ச்சலுக்கு 9 பேர் பலி மாநகராட்சி தகவல்

மும்பையில் கடந்த 2 மாதத்தில் மட்டும் எலிக்காய்ச்சலுக்கு 9 பேர் பலியாகி உள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

Update: 2018-08-01 23:39 GMT
மும்பை, 

மும்பையில் கடந்த 2 மாதத்தில் மட்டும் எலிக்காய்ச்சலுக்கு 9 பேர் பலியாகி உள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

9 பேர் பலி

மும்பையில் மழைக்கால நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சலுக்கு உயிர் பலிகள் ஏற்பட்டு வருகின்றன.

மழைக்காலம் தொடங்கிய கடந்த 2 மாதத்தில் மட்டும் தாராவி, சயான், ஒர்லி, பாண்டுப், மலாடு, போரிவிலி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 9 பேர் அந்த நோயால் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் 5 பேர் கடந்த இரு வாரங்களில் பலியாகி இருக்கின்றனர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு எலிக்காய்ச்சல் உயிர் பலி அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு 7 பேர் எலிக்காய்ச்சலால் உயிரிழந்து இருந்தனர்.

மற்ற நோய்கள்

இந்தநிலையில், கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 100 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்ைச பெற்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டெங்கு காய்ச்சலால் 60 பேரும், மலேரியாவால் 634 பேரும், இரைப்பை குடல் அழற்சியால் 1,089 பேரும், கல்லீரல் அழற்சி நோயால் 104 பேரும் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல காலரா நோயால் 6 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த தகவலை மும்பை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்