பள்ளி மாணவி மீது லாரி மோதல்: டிரைவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
பள்ளி மாணவி மீது மோதிய லாரி டிரைவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். பின்னர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரிமளம்,
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் கனிஷ்கா (வயது 11). இவள் அரிமளம் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வழக்கம் போல் கனிஷ்கா தனது சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அரிமளம்-மீனாட்சிபுரம் சாலையை கனிஷ்கா சைக்கிளில் கடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று சைக்கிள் மீது மோதியது.
இதில் லாரியில் சிக்கிய சைக்கிள் சிறிது தூரம் இழுந்து சென்றது. இதனால் பள்ளி மாணவி கனிஷ்கா படுகாயமடைந்தாள். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் படுகாயமடைந்த கனிஷ்காவை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில் அந்த லாரி அங்கிருந்து மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்றது. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் மோட்டார் சைக்கிள்களில் துரத்தி சென்று, முடுகம்பட்டி பகுதியில் லாரியை மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த லாரியை ஓட்டி வந்த லாரி டிரைவருக்கு தர்ம அடி கொடுத்தனர். மேலும் அந்த லாரியின் முன்பக்க கண்ணாடியை அடித்து உதைத்தனர். பின்னர் இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் அந்த லாரியை சிறைபிடித்து புதுக்கோட்டை-ராயவரம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரிமளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அந்த லாரி டிரைவரை மீட்டு சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லாரி டிரைவர் ஜெயராஜ் (35) என்பவது தெரியவந்தது. பின்னர் அவரை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.