செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகத்திற்காக வர்ணம் பூசும் பணிகள் தீவிரம்
செட்டிகுளத்தில் உள்ள தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி வர்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளத்தில் வடபழனி என்றழைக்கப்படும் தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற 30-ந்தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலில் திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. படிக்கட்டுகள் மூலம் மலை ஏறும் பகுதியில் உள்ள விநாயகர் கோவில், மலை உச்சியில் உள்ள கணபதி கோவில், இடும்பன் சன்னதி, மூலவர் கோபுரம், மூலவர் சன்னதியின் சுற்று மண்டபம் ஆகியவற்றில் வர்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆண்டுதோறும் கந்த சஷ்டிவிழா, படி விழா நடைபெறும் பகுதியில் முருகன், வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருக்கும் திரு உருவங்களும், கேரள கலைநயத்துடன் மேற்கூரையும் அமைக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. மூலவர் சன்னதியை சுற்றியுள்ள மண்டபத்தில் கிரானைட் தளம் பதிக்கப்பட்டு மெருகூட்டப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் திருப்பணி முழுமையாக முடிவடைய உள்ளன.
இதனிடையே கோவிலுக்கு அன்றாடம் வந்து செல்லும் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றவும், குலதெய்வமாக வழிபடும் குடும்பங்களை சேர்ந்தவர்களும் தங்களது குழந்தைகளுக்கு முடியிறக்கி, காதுகுத்துவதற்கும் இக்கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றுகின்றனர். ஆனால் தண்டாயுதபாணி கோவில் மலைக்குன்றின் மேற்கு பகுதியில், தெப்பக்குளம் அருகே மரங்கள் அடர்ந்த சோலைகளாக இருந்த மலை அடிவாரத்தில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக வறண்ட பகுதியாக மாறியுள்ளன. இந்த சோலை பகுதியில் தெப்பக்குளம் அருகே வழக்கமாக முடியிறக்கப்படுகிறது. ஆனால் முடியிறக்கும் பக்தர்கள், குழந்தைகளை குளிக்க வைப்பதற்காக ஆழ்துளை கிணறு பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு கைப்பம்பு பொருத்தப்பட்டிருந்தது.
இந்த ஆழ்துளை கிணறு பக்தர்களுக்கு பெரும் வசதியாக இருந்தது. ஆனால் பல மாதங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு தூர்ந்து போய்விட்டதாக கூறி உள்ளாட்சித்துறையின் மூலம் கைப்பம்பு அகற்றப்பட்டுவிட்டது. இதனால் பக்தர்கள் முடியிறக்கிய பிறகு குளிக்க முடியாமல் வயல் கிணறுகளை நாடி செல்லவேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. வெயில் வாட்டி வதைப்பதால், கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதாலும் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் அடிக்கடி மின்சாரம் தடைபடுவதாலும், வயல் கிணறுகளில் இருந்து போதிய அளவு வயல்களுக்கே தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலையில் உள்ளனர்.
இப்பகுதியில் வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயி ஒருவர் பக்தர்களின் வசதிக்காக தாமாக முன்வந்து தண்ணீர் தொட்டி அமைத்துகொடுத்துள்ளார். கோவில் நிர்வாகம் செய்யவேண்டிய அடிப்படையான முக்கிய பணியை தனி விவசாயி ஒருவர் செய்துவருவதை பக்தர்கள் பாராட்டுகின்றனர்.
தெப்பக்குளம், அதன் அருகே உள்ள ஆடைமாற்றும் சிறு மண்டபம் ஆகிய இடங்கள் மதுபான பிரியர்களின் புகலிடமாக மாறிவிட்டன. தனியாக வரும் பெண்கள், அல்லது குடும்பத்துடன் வரும் பக்தர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பக்தர்களுக்கு போதிய வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை. இதுகுறித்து கோவில் நிர்வாகம் எந்த அக்கறையும் கொள்ளவில்லை. தெப்பக்குளம் அருகே சேகரமாகி உள்ள பக்தர்களின் முடிகள் குப்பை மேடுகளாக மாறி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. இவற்றை அகற்ற வேண்டும் என்று துறையூர் பகுதியில் இருந்து முடியிறக்குவதற்காக வந்த பக்தர்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தினர்.
தற்போது ஆடிக்கிருத்திகை விழா, கோவில் கும்பாபிஷேகம், அதனை தொடர்ந்து மண்டலாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள். அன்றாடம் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வேண்டும் என்று பக்தர்கள் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.