ஆண்களை ஓரினசேர்க்கைக்கு அழைத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் கைது
ஆண்களை ஓரினசேர்க்கைக்கு அழைத்து நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
சென்னை விருகம்பாக்கத்தில் ஒரு கும்பல் ஓரினசேர்க்கைக்கு ஆண்களை அழைத்து, அவர்களை நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பதாக விருகம்பாக்கம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜீவ்பிரின்ஸ் ஆரோன் தலைமையில் போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விடுதிகளில் கண்காணித்து வந்தனர்.
அப்போது விருகம்பாக்கம், சாலிகிராமத்தில் உள்ள ஒரு விடுதியில் சந்தேகத்திற்கிடமாக சிலர் தங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள்.
அப்போது பக்கத்து அறையில் இருந்து வாலிபர் அலறும் சத்தம் கேட்டது. போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அந்த அறையில் வாலிபர் ஒருவரை நிர்வாணமாக்கி மற்றொருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தார். அவர்கள் ஓரினசேர்க்கைக்கு ஆண்களை அழைத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் என்பது தெரியவந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட 4 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
தூத்துக்குடியை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி (வயது 32). இவர் ‘பேஸ்புக்’ மற்றும் ‘வாட்ஸ் அப்’ மூலம் ஓரினசேர்க்கைக்கு விரும்பும் நபர்களை கண்டறிந்து அவர்களை அழைத்துவருவார். விருகம்பாக்கம் பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி அந்த நபர்களை நிர்வாணமாக்குவார்.
அந்த நேரத்தில் அருகில் அறை எடுத்து தங்கியிருக்கும் அவரது கூட்டாளிகள் அந்த அறைக்குள் நுழைந்து செல்போனில் படம் எடுத்து மிரட்டி அந்த நபரிடம் இருக்கும் பணம், நகை போன்றவற்றை பறித்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். பின்னர் மந்திரமூர்த்தி தனக்கு எதுவும் தெரியாததுபோல அந்த நபரை அனுப்பிவைத்துவிடுவார்.
இவர்கள் விருகம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மந்திரமூர்த்தி(32), மாரியப்பன்(30), முத்துராமலிங்கம் (32), இளையராஜா(29) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த கும்பலை சேர்ந்தவர்கள் வேறு யாராவது உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.