கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு: 3 மகன்களுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
காரிமங்கலம் அருகே கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததால் 3 மகன்களுடன் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சவுளுக்கொட்டாயை சேர்ந்தவர் லோகநாதன்(வயது 38). கட்டிட மேஸ்திரி. இவருக்கு நதியா (30) என்ற மனைவியும், சஞ்சய் (12), பூவரசன் (8), நிர்மல் (6) ஆகிய 3 மகன்களும் இருந்தனர். இதில் மாற்றுத்திறனாளியான சஞ்சய் சென்னம்பட்டி அரசு பள்ளியில் 7-ம் வகுப்பும், பூவரசன் சின்னாத்துப்பள்ளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பும், நிர்மல் 1-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்த நிலையில் லோகநாதன் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் மதுகுடித்து விட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் லோகநாதனுக்கும், அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நதியா தனது பெற்றோரிடம் புகார் கூறி வந்துள்ளார்.
இதனால் நதியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பலமுறை லோகநாதனுக்கு அறிவுரை கூறி 2 பேரையும் சமாதானம் செய்து வந்துள்ளனர். ஆனால் லோகநாதன் குடிப்பதையும், கள்ளத்தொடர்பையும் தொடர்ந்து வந்துள்ளார். கடந்த 26-ந்தேதி இரவு கணவன்- மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. மறுநாள் நதியா, 3 மகன்களுடன் வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.
இதையடுத்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள், நதியா மற்றும் 3 குழந்தைகளை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக நதியாவின் பெற்றோர் காரிமங்கலம் போலீசில் புகார் செய்தனர். இதுதொடர்பாக கடந்த 28-ந்தேதி போலீசார் லோகநாதனிடம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், நேற்று காலை லோகநாதனின் பெற்றோர் வசிக்கும் குடிசையின் அருகில் உள்ள விவசாய கிணற்றில் 2 சிறுவர்களின் உடல்கள் தண்ணீரில் மிதந்துள்ளது. இதுதொடர்பாக அடிலம் கிராம நிர்வாக அலுவலர் கதிரவனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் காரிமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஸ்வநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது விவசாய கிணற்றில் படிக்கட்டுகள் இல்லாததால் 2 பேரின் உடல்களையும் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து பாலக்கோடு தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து கயிறு மூலம் கிணற்றில் இறங்கி 2 சிறுவர்களின் உடல்களையும் மீட்டனர். அப்போது அவர்கள் மாயமான நதியாவின் மகன்கள் சஞ்சய், பூவரசன் என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரின் வாய்களும் துணியால் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், தீயணைப்பு படை வீரர்களின் உதவியுடன் நதியா, நிர்மல் ஆகிய 2 பேரின் உடல்களையும் கிணற்றில் தேடினர்.
அப்போது தண்ணீரில் குழந்தை நிர்மல், தாயார் நதியாவின் மார்போடு துண்டால் கட்டப்பட்ட நிலையிலும், இவர்கள் 2 பேரின் வாய்களும் துணியால் கட்டப்பட்டு சாக்குப்பை ஒன்றில் பாறாங்கல்லுடன் கிடப்பது தெரியவந்தது. இதைப் பார்த்து அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து போலீசார், தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் சம்பவ இடத்திற்கு வந்து 4 பேரின் உடல்களையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் நதியா உள்ளிட்ட 4 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணவன் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் வேதனையில் நதியா, குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் காரிமங்கலம் போலீசார் தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், நதியா மற்றும் 3 மகன்களின் வாய்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் பிணமாக மிதந்ததாலும், நதியாவின் உடல் சாக்குப்பை ஒன்றில் பாறாங்கல்லுடன் கிடந்ததாலும் அவர்கள் கொலை செய்யப்பட்டு உடல்கள் கிணற்றில் வீசப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
அதன்பேரில் நதியாவின் கணவர் லோகநாதன் மற்றும் அவரது தந்தை சண்முகம், தாயார் தேவகி ஆகிய 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.