மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் சாலையை அகலப்படுத்தும் பணி அதிகாரி ஆய்வு
மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் சாலையை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் இளம்பரிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குத்தாலம்,
மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலையில் தருமபுரத்தில் சாலையை அகலப்படுத்தும் பணியும், தடுப்புச்சுவர் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் இளம்பரிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகள் தரமாக மேற்கொள்ளப்படுகிறதா? என்பது குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலையில் தருமபுரத்தில் ஒரு புறத்தில் கல்லூரியும், மற்றொரு புறத்தில் மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. இங்கு சாலை வளைவாகவும் உள்ளது.
இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. விபத்துகளை தவிர்க்கும் வகையில் 5 மீட்டர் அகலம் உள்ள இந்த சாலையில் தருமபுரம் பகுதியில் 7 மீட்டர் சாலையாக அகலப் படுத்தி, தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகள் ஒரு வாரத்துக்குள் முடிவடையும்.
இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது உதவி கோட்ட பொறியாளர் தனராஜன், உதவி பொறியாளர் வேல்முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.