தீவனங்கள் கிடைக்காததால் சுவரொட்டிகள், பிளாஸ்டிக் கழிவுகளை தின்னும் கால்நடைகள்

சென்னையில் ஒரு சில இடங்களில் இன்றும் வீட்டில் கால்நடைகளான ஆடு, மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. முன்பெல்லாம் அவற்றிற்கு தேவையான தீவனங்களை சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து கொண்டு வந்து கால்நடைகளுக்கு வைப்பார்கள்.

Update: 2018-07-30 22:30 GMT
திரு.வி.க நகர்.

தற்போது சென்னை பரந்து விரிந்துள்ள நிலையில் தீவனங்கள் வாங்கவேண்டும் என்றால் 80 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லவேண்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆடு, மாடுகளை வளர்க்கும் பெரும்பாலானோர் உணவுக்காக அவற்றை காலையிலேயே அவிழ்த்து விட்டு விடுகின்றனர்.

அவைகளும் சாலையோரம் உள்ள உணவு கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் சுவரொட்டிகள் ஆகியவற்றை தின்று பசியை தணித்துக்கொள்கின்றன. தண்ணீர் தேவைப்படும் பட்சத்தில் சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரையே

 இதனால் கால்நடைகளுக்கு தொற்றுவியாதிகள் பரவுகின்றன. மேலும் முறையாக பராமரிக்கப்படாத இப்படிப்பட்ட கால்நடைகள் விரைவில் இறந்துபோய் விடுகின்றன.

ஓட்டேரி பிரிக்ளின் சாலையில் பசியில் சுற்றித்திரிந்த 2 ஆடுகள் அங்கு ஒரு சுவரில் ஒட்டப்பட்டிருந்த கோவில் கும்பாபிஷேக சுவரொட்டியை தின்றன. சுவற்றின் மீது 2 கால்களை வைத்து, 2 கால்களில் நின்றபடி கிடைத்த வரை சுவரொட்டியை தின்றுவிட்டு அந்த ஆடுகள் சென்றன. 

மேலும் செய்திகள்