கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு: தி.மு.க. தொண்டர் மாரடைப்பால் சாவு
கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அறிந்த தி.மு.க தொண்டர் மாரடைப்பால் இறந்தார்.
ஒரத்தநாடு,
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 27–ந் தேதி இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதையடுத்து அவருடைய உடல் நலம் சீரானது.
கருணாநிதி உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து தகவல் அறிந்த தி.மு.க. தொண்டர்கள், ஆஸ்பத்திரி முன்பு குவிய தொடங்கினர். அவர் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டி தஞ்சை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கருணாநிதியின் உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் ஆஸ்பத்திரி தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதன் காரணமாக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கருணாநிதியின் உடல் நிலை குறித்து டி.வி.யில் ஒளிபரப்பப்பட்ட செய்திகளை தொண்டர்கள் கவலையுடன் கவனித்து வந்தனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு முத்தம்மாள்தெருவை சேர்ந்த தி.மு.க. தொண்டர் முருகன் (வயது65) என்பவரும் நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்தபடி கருணாநிதியின் உடல் நிலை குறித்த செய்திகளை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது கருணாநிதியின் உடல்நலத்தில் பின்னடைவு என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த முருகனுக்கு, மாரடைப்பு ஏற்பட்டது. இதில் மயங்கி விழுந்த அவர் மரணம் அடைந்தார். இதை அறிந்த தி.மு.க பிரமுகர்கள், முருகனின் வீட்டுக்கு சென்று அவருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். கருணாநிதியின் உடல்நலம் குறித்து தகவல் அறிந்த தி.மு.க. தொண்டர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.