திருவட்டார் கல்வி மாவட்டம் திருவட்டாரிலேயே செயல்பட வேண்டும் கலெக்டரிடம், காங்கிரஸ் கட்சியினர் மனு
திருவட்டார் கல்வி மாவட்டம் திருவட்டாரிலேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம், காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள லூயி பிரெய்லி கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த மக்கள், கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு அளித்தனர். அந்த வகையில் மொத்தம் 311 பேரிடம் இருந்து மனுக்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே பெற்று கொண்டார்.
அதைத் தொடர்ந்து திறன் வார தினத்தை முன்னிட்டு கல்லூரி மற்றும் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கட்டுரை போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்.
அப்போது குமரி மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தை (ஏ.ஐ.டி.யு.சி.) சேர்ந்தவர்கள் திரளாக வந்து கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
நல வாரிய உறுப்பினர்கள் நலத்திட்ட உதவிகள் கேட்டு விண்ணப்பித்தால் அவர்களுக்கு 30 நாட்களுக்குள் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் நல வாரிய உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பிரசவ உதவி தொகை குறைந்த பட்ச சம்பள சட்டப்படி கணக்கிட்டு 6 மாத சம்பளமாக ரூ.90 ஆயிரம் வழங்க வேண்டும். ஈ.எஸ்.ஐ., பி.எப். உள்ளிட்ட வைப்பு நிதி திட்டங்களையும் அமல்படுத்த வேண்டும். திருமண உதவிதொகையாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். குழந்தைகளின் கல்விச் செலவு அனைத்தையும் வாரியம் ஏற்றுக்கொண்டால் பயனுள்ளதாக இருக்கும். இயற்கையாக மரணம் அடைந்தால் ரூ.5 லட்சமும், விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ.10 லட்சமும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மனு அளிக்க வந்த போது சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து உள்பட பலர் உடனிருந்தனர்.
இதே போல காங்கிரஸ் இளைஞரணி மாநில பொதுச் செயலாளர் வின்செல்ஜின் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், ‘பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவட்டார் கல்வி மாவட்ட அலுவலகம் தற்போது மார்த்தாண்டம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது. எனவே அதை திருவட்டாரிலேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டு இருந்தது.
மனு அளித்தபோது குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் அலெக்ஸ், மகேஸ்லாசர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.